தூத்துக்குடிக்கு மு.க.ஸ்டாலின் இன்று வருகை


தூத்துக்குடிக்கு மு.க.ஸ்டாலின் இன்று வருகை
x
தினத்தந்தி 24 Feb 2019 10:45 PM GMT (Updated: 24 Feb 2019 11:01 PM GMT)

தூத்துக்குடிக்கு மு.க. ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) வருகிறார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று(திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வருகிறார்.

அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. காலை 9 மணிக்கு வல்லநாடு, கே.டி.சி.நகர், சங்கர்நகர், கங்கைகொண்டான் வழியாக சவலாப்பேரிக்கு செல்கிறார். அங்கு பயங்கரவாதிகள் தாக்குதலில் இறந்த துணை ராணுவ வீரர் சுப்பிரமணியன் குடும்பத்துக்கு ஆறுதல் கூறுகிறார்.

காலை 10 மணிக்கு தூத்துக்குடி அருகே உள்ள மேலக்கூட்டுடன் காடு பகுதியில் நடைபெறும் ஊராட்சி சபை கூட்டத்தில் பங்கேற்கிறார். 11 மணிக்கு மங்களகிரி விலக்கில் நடைபெறும் தி.மு.க. முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். தொடர்ந்து தூத்துக்குடி சத்யா ரிசார்டில் ஓய்வெடுக்கிறார். மாலை 4 மணிக்கு தெற்கு வேம்பார் ஊராட்சி சபை கூட்டத்திலும், 6 மணிக்கு விளாத்திகுளம்-மதுரை ரோட்டில் நடைபெறும் தி.மு.க. முகவர்கள் கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசுகிறார். இரவு 7 மணிக்கு நாகலாபுரம், பந்தல்குடி வழியாக மதுரை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை புறப்படுகிறார்.

இதையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் ஆங்காங்கே வரவேற்பு வளைவுகள், டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. உற்சாக வரவேற்பு அளிப்பதற்காக தி.மு.க.வினர் ஏற்பாடுகள் செய்து உள்ளனர். 

Next Story