மும்பை எம்.எல்.ஏ. விடுதியில் ரூ.40 ஆயிரம் திருடிய வாலிபர் கைது


மும்பை எம்.எல்.ஏ. விடுதியில் ரூ.40 ஆயிரம் திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 25 Feb 2019 5:56 AM IST (Updated: 25 Feb 2019 5:56 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் ரூ.40 ஆயிரம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

மும்பை நரிமன்பாயிண்டில் எம்.எல்.ஏ.க்கள் விடுதி உள்ளது. இந்த விடுதியில் உள்ள ஒரு அறையில் நேதாஜி பாட்டீல் என்பவர் தங்கியிருந்தார். சம்பவத்தன்று வெளியே சென்றிருந்த அவர் மீண்டும் விடுதியில் உள்ள அறைக்கு வந்தார்.

அப்போது அவரது அறையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்ததை பார்த்து நேதாஜி பாட்டீல் அதிர்ச்சியடைந்தார். இந்தநிலையில், நேதாஜி பாட்டீலை கண்டதும் அந்த வாலிபர் அங்கிருந்து ஓடமுயன்றார்.

இதனால் சந்தேகம் அடைந்த அவர் சத்தம் போட்டார். சத்தம் கேட்டு ஓடி வந்த அங்கிருந்தவர்கள் தப்பிச்செல்ல முயன்ற வாலிபரை மடக்கி பிடித்தனர். மேலும் அவரிடம் விசாரித்ததில், அந்த வாலிபர் நேதாஜி பாட்டீல் அறையில் இருந்த ரூ.40 ஆயிரத்தை திருடி விட்டு தப்பி செல்ல முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து அந்த வாலிபரை பிடித்து கப்பரேடே போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர். இதில் அவர் ஜல்காவை சேர்ந்த நிலேஷ் (வயது30) என்பது தெரியவந்தது. வேலையில்லாமல் இருந்து வந்ததால் பணத்தை திருடியதாக அவர் கூறினார்.

Next Story