கொமரகவுண்டன்பட்டியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் பொதுமக்கள், கலெக்டரிடம் மனு
கொமரகவுண்டன்பட்டியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி அப்பகுதி பொதுமக்கள் நேற்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
நாமக்கல்,
நாமக்கல் ஒன்றியம் ஆவல்நாயக்கன்பட்டி அருகே உள்ள கொமரகவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அங்கு அவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக் கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-கொமரகவுண்டன்பட்டியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்கு போதிய குடிநீர் வசதி இல்லாமல் கடுமையாக அவதிப்படுகின்றோம். கடந்த ஆண்டு கிராம ஊராட்சி நிதியில் இருந்து ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. அதில் தரமற்ற மின் மோட்டார் மற்றும் வயர்கள் பயன்படுத்தப்பட்டதால் அவை பழுதாகி விட்டன.
3 முறை பழுது நீக்கம் செய்யப்பட்டும், தற்போது மீண்டும் பழுது ஏற்பட்டு உள்ளது. இதனால் நாங்கள் குடிநீர் இல்லாமல் பல்வேறு இடங்களுக்கு சென்று குடிநீர் எடுத்து வரும் அவலநிலை ஏற்பட்டு உள்ளது. எனவே பழுதான மின் மோட்டாருக்கு பதில் தரமான மின் மோட்டார் மற்றும் வயர் அமைத்து தங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story