ஜெயங்கொண்டம் ஒன்றியம், கழுவந்தோண்டி ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளிகளுக்கு கல்விச்சீர்
ஜெயங்கொண்டம் ஒன்றியம், கழுவந்தோண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் விழா நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்,
ஜெயங்கொண்டம் ஒன்றியம், கழுவந்தோண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் தாமோதரன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் லதா முன்னிலை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மகாலிங்கம் வரவேற்றார். விழாவில் பள்ளிக்கு தேவையான ரூ.30 ஆயிரம் மதிப்பிலான பாத்திரங்கள், சுவர் கடிகாரம் உள்பட பல்வேறு பொருட்களை கழுவந்தோண்டி மாரியம்மன் கோவிலில் இருந்து பொதுமக்கள் ஊர்வலமாக எடுத்து வந்து, தலைமையாசிரியரிடம் ஒப்படைத்தனர். விழாவில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் சிவசந்திரன், சுப்ரமணியன் ஆகியோரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து பள்ளியில் நூலகம் திறக்கப்பட்டது. இந்த விழாவில் ஊர் பொதுமக்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சூரியமணல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர் அசோகன் தலைமை தாங்கினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாலாஜி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் பயிற்றுனர்கள் மாணவர்களை வாழ்த்தி பேசினர். விழாவில் பள்ளிக்கு தேவையான ரூ.25 ஆயிரம் மதிப்பிலான மேஜை, நாற்காலி, கணினி, பீரோ, பாத்திரங்கள் ஆகியவற்றை ஊர் பொதுமக்கள், பெற்றோர்கள் மேளதாளங்களுடன் ஊர்வலமாக பள்ளிக்கு எடுத்து வந்து பள்ளி தலைமையாசிரியர் இந்திராவிடம் ஒப்படைத்தனர். நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகள் ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் பெரம்பலூர் அருகே குரும்பலூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கிராம மக்கள் ஒன்றிணைந்து பள்ளிக்கு தேவையான கல்வி உபகரணங்கள், பொருட்கள் அடங்கிய கல்விச்சீர் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு கிராம மக்கள் பள்ளிக்கு தேவையான நாற்காலிகள், குடிநீர் பாத்திரம், பிளாஸ்டிக் குடங்கள் விளையாட்டு உபகரணங்கள், எழுது பொருட்கள், கற்பித்தல் கருவிகள் உள்பட ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்களை ஊர்வலமாக எடுத்து வந்து பள்ளிக்கு கொடுத்தனர். இந்த விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர் ராமதாஸ் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜோதிமணி, பெற்றோர்- ஆசிரியர் சங்க தலைவர் சுதா, ஆசிரியர் பயிற்றுனர் அனுராதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் ஜார்ஜ் வரவேற்றார். முடிவில் ஆசிரியை அமுதா நன்றி கூறினார்.

Related Tags :
Next Story