இறந்து விட்டதாக கூறி வாக்காளர் பட்டியலில் இருந்து தி.மு.க. பிரமுகர் பெயர் நீக்கம் முத்துப்பேட்டையில் பரபரப்பு


இறந்து விட்டதாக கூறி வாக்காளர் பட்டியலில் இருந்து தி.மு.க. பிரமுகர் பெயர் நீக்கம் முத்துப்பேட்டையில் பரபரப்பு
x
தினத்தந்தி 26 Feb 2019 4:30 AM IST (Updated: 26 Feb 2019 1:48 AM IST)
t-max-icont-min-icon

முத்துப்பேட்டையில் இறந்து விட்டதாக கூறி தி.மு.க. பிரமுகர் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள ஆரியலூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் ஆவார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர் பட்டியலை சரிபார்த்துள்ளார்.

அதில் அவருடைய பெயரை காணவில்லை. இதுபற்றி வாக்குச்சாவடி மைய அலுவலர்களிடம் விசாரித்தபோது, அவர் இறந்து விட்டதாக கூறி வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரும், அப்பகுதியை சேர்ந்த தி.மு.க.வினரும் தாசில்தார் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோரிடம் முறையிட்டனர். அப்போது உயிரோடு இருக்கும் நபரை இறந்து விட்டதாக கூறி வாக்காளர் பட்டியலில் எப்படி நீக்கலாம்? என கேள்வி எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் பெயர் நீக்கப்பட்டது குறித்து வழக்கு தொடர முடிவு செய்து இருப்பதாக பாலசுப்பிரமணியன், கூறி உள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது, எனது பெயரை நீக்கியது போல தி.மு.க.வை சேர்ந்த 10 பேரை நீக்கி உள்ளனர். தி.மு.க.வை சேர்ந்தவர்கள் என்பதால் எங்களை வேண்டுமென்றே நீக்கி உள்ளனர். இதுபற்றி வழக்கு தொடர உள்ளேன் என்றார்.

இறந்து விட்டதாக கூறி தி.மு.க. ஒன்றிய துணைச் செயலாளர் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பது, அப்பகுதியை சேர்ந்த தி.மு.க.வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story