லாரி திருடியவருக்கு 3 ஆண்டு சிறை - கோவை கோர்ட்டு தீர்ப்பு


லாரி திருடியவருக்கு 3 ஆண்டு சிறை - கோவை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 26 Feb 2019 4:15 AM IST (Updated: 26 Feb 2019 1:54 AM IST)
t-max-icont-min-icon

லாரி திருடியவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்ப ளித்தது.

கோவை, 

கோவை சரவணம்பட்டி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 40). இவர் தனது லாரியை கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் 17-ந் தேதி அம்மன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே நிறுத்தி இருந்தார்.அந்த லாரியை ஈரோடு மாவட்டம் பவானிசாகரை சேர்ந்த எம்.கருப்புசாமி (35), மற்றொரு கருப்புசாமி, மாணிக்கம் ஆகியோர் சேர்ந்து திருடிச்சென்றனர். பின்னர் அவர்கள் அந்த லாரியின் பதிவு எண் மற்றும் ‘சேஸ்’ எண்ணை மாற்றி உள்ளனர்.

இது குறித்த புகாரின்பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து எம்.கருப்புசாமி, மற்றொரு கருப்புசாமி, மாணிக்கம் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு கோவை 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது.இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி எம்.கருப்புசாமிக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் மெய்காவல் சிறை தண்டனையும் விதித்து மாஜிஸ்திரேட்டு என்.ஞானசம்பந்தம் தீர்ப்பு கூறினார்.

மேலும் இந்த வழக்கில் மற்றொரு கருப்புசாமி, மாணிக்கம் ஆகியோர் மீது குற்றம் நிரூபிக்கப்பட வில்லை என்பதால் இருவரையும் விடுதலை செய்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

Next Story