ஆன்லைன் உணவு வினியோகிக்கும் ஊழியர்களுக்கு அடையாள அட்டை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
குற்றங்களை தடுக்க ஆன்லைன் மூலம் உணவு வினியோகம் செய்யும் ஊழியர்கள் அடையாள அட்டை அணியவேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு வலியுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி கிழக்குப்பகுதி போலீஸ் சார்பில் ஆன்லைன் மூலம் உணவு வினியோகிக்கும் ஊழியர்களுக்கான ஆலோசனை கூட்டம் தனியார் ஓட்டலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு மாறன் தலைமை தாங்கி பேசியதாவது:-
பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஆன்லைன் மூலமாக உணவுப்பொருட்களை ஆர்டர் பெற்று வீடுகளுக்கு வினியோகம் செய்யும் உங்களுக்கு தனி சீருடை உள்ளது. அந்த சீருடை உங்களை சுலபமாக அடையாளம் கண்டுகொள்ள உதவுகிறது.
உங்களுக்கு அடையாள அட்டை வழங்க சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. விரைவில் அடையாள அட்டை வழங்கப்படும். அதன்பிறகு அடையாள அட்டை இல்லாத ஊழியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். குற்ற சம்பவங்களை நடைபெறாமல் தடுக்கவே அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. எனவே போலீசாருக்கு அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று குறிப்பிட்டார்.

Related Tags :
Next Story