நாகூர் அருகே பரபரப்பு: மரத்தில் தொங்கிய எலும்புக்கூடு போலீசார் விசாரணை

நாகூர் அருகே மரத்தில் எலும்புக்கூடு தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகூர்,
நாகை மாவட்டம் நாகூர் அருகே மத்தளங்குடி பகுதியில் உள்ள ஒரு கருவேல மரத்தில் எலும்புக்கூடு ஒன்று தொங்கியதை நேற்று முன்தினம் இரவு அப்பகுதி பொதுமக்கள் பார்த்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக கிராம நிர்வாக அதிகாரி சக்திவேலுக்கு தகவல் தெரிவித்தனர். அதேபோல நாகூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் நாகை வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம், நாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் யாருடைய எலும்புக்கூடு என்பது பற்றிய விவரங்கள் சரிவர தெரியவில்லை.
இதையடுத்து போலீசார் எலும்புக்கூடை கைப்பற்றி பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு எலும்புக்கூடு ரசாயன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது. இதன் பின்னரே அது யாருடைய எலும்புக்கூடு? இறந்தது எப்படி? என்பது போன்ற விவரங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி நாகூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கருவேல மரத்தில் எலும்புக்கூடு தொங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story