மலேசியாவில் இருந்து சென்னைக்கு ‘ஸ்பீக்கரில்’ மறைத்து கடத்திய ரூ.7 லட்சம் தங்கம் பறிமுதல்


மலேசியாவில் இருந்து சென்னைக்கு ‘ஸ்பீக்கரில்’ மறைத்து கடத்திய ரூ.7 லட்சம் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 27 Feb 2019 4:15 AM IST (Updated: 26 Feb 2019 11:43 PM IST)
t-max-icont-min-icon

மலேசியாவில் இருந்து சென்னைக்கு ‘ஸ்பீக்கரில்’ மறைத்து கடத்திய ரூ.7 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி கொண்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது மலேசியாவில் இருந்து விமானத்தில் வந்த பயணிகளை கண்காணித்தனர். அதில், சென்னையை சேர்ந்த வாலிபரின் உடைமைகளை சோதனை செய்தனர். அதில் இருந்த ஆடியோ ஸ்பீக்கரை பிரித்து பார்த்தபோது, அதில் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடமிருந்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள 200 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story