கல்லலில் மாட்டு வண்டி– குதிரை வண்டி பந்தயம்


கல்லலில் மாட்டு வண்டி– குதிரை வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 27 Feb 2019 3:15 AM IST (Updated: 27 Feb 2019 1:37 AM IST)
t-max-icont-min-icon

கல்லலில் மாட்டுவண்டி–குதிரைவண்டி பந்தயம் நடைபெற்றது.

கல்லல்,

காரைக்குடி அருகே கல்லலில் மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. கல்லல்–காரைக்குடி சாலையில் நடைபெற்ற இந்த பந்தயத்தில் மொத்தம் 65 வண்டிகள் கலந்துகொண்டன.

முதலாவதாக குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் பெரிய குதிரை வண்டி பந்தயத்தில் 7 குதிரை வண்டிகள் கலந்துகொண்டன. முதல் பரிசை நாச்சியார்கோவில் பாஸ்கர் வண்டியும், 2–வது பரிசை காளையார்கோவில் மேட்டுப்பட்டி குமார் வண்டியும், 3–வது பரிசை சிவகங்கை பொன்னம்பட்டி நீதிமான் வண்டியும் பெற்றன.

பின்னர் பெரிய மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் 27 வண்டிகள் கலந்துகொண்டதில் முதல் பரிசை நெற்புகப்பட்டி நந்தகுமார் வண்டியும், 2–வது பரிசை விராமதி தையல் நாயகி கருப்பையா வண்டியும், 3–வது பரிசை கல்லல் உடையப்பா சக்தி வண்டியும் பெற்றன.

இறுதியாக நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 34 வண்டிகள் கலந்துகொண்டன. முதல் பரிசை கல்லணை விஸ்வாரவிச்சந்திரன் வண்டியும், 2–வது பரிசை தேத்தாம்பட்டி பொன்னுப்பிள்ளை வண்டியும், 3–வது பரிசை குண்டேந்தல்பட்டி சுப்பு வண்டியும் பெற்றன. வெற்றி பெற்ற குதிரை மற்றும் மாட்டு வண்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story