ஒப்பந்ததாரர்களிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர், சத்துணவு திட்ட மேலாளர் சிக்கினர் - சேந்தமங்கலத்தில் பரபரப்பு
சேந்தமங்கலத்தில் ஒப்பந்ததாரர்களிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர், சத்துணவு திட்ட மேலாளர் ஆகிய 2 பேர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சேந்தமங்கலம்,
நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்தவர் பத்மநாபன். இவர் சேந்தமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருகிறார். அதே அலுவலகத்தில் வடுகப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி சத்துணவு திட்ட மேலாளராக உள்ளார். இந்த நிலையில் வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாபன் வளர்ச்சி திட்ட பணிகளை செய்த ஒப்பந்ததாரர்களிடம் வைப்பு தொகையை திரும்ப பெறுவதற்கு லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த ரகசிய தகவல் நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கிடைத்தது.
இந்த தகவலின் பேரில் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் சேந்தமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு தணிக்கைக்காக சென்றனர். அங்கு சத்துணவு மேலாளர் சுப்பிரமணியிடம் இருந்த கணக்கில் வராத ரூ.15 ஆயிரத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாபன் வலியுறுத்தியதன் பேரில் ஒப்பந்ததாரர்கள் கடல் வீரன் ரூ.2 ஆயிரம், செந்தில்குமார் ரூ.1000-ம், சிவகாமி ரூ.2 ஆயிரம், மலர் வண்ணன் ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.15 ஆயிரத்தை தான் லஞ்சமாக பெற்று கொண்டதாக சத்துணவு திட்ட மேலாளர் சுப்பிரமணி தெரிவித்தார்.
இதையடுத்து சுப்பிரமணியையும், வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாபனையும் பிடித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். லஞ்ச பணம் 15 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது. சேந்தமங்கலத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 2 பேர் சிக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story