வறட்சி காரணமாக திருமூர்த்தி அணையில் குறைந்து வரும் நீர்மட்டம்
வறட்சி காரணமாக திருமூர்த்தி அணையின் நீர் மட்டம் குறைந்து வருகிறது.
தளி,
பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்டத்தின் கீழ் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த பாசன நிலங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் சுழற்சி முறையில் உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அத்துடன் சுற்றுப்புற கிராம மக்கள் பயன்பெறும் வகையில் எண்ணற்ற கூட்டுக்குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 5-ந் தேதி 3-ம் மண்டல பாசனத்திற்கு உரிய இடைவெளியில் நீர்வரத்து மற்றும் நீர்இருப்பினை பொறுத்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதைத்தொடர்ந்து விவசாயிகள் சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வந்தனர். பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வந்தது. ஆனால் காண்டூர் கால்வாய் மூலமாக பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து தொடர்ச்சியாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் சரிவை சந்தித்தாலும் கால்வாய்களில் திறக்கப்பட்ட தண்ணீர் அடைக்கப்படும் போது மீண்டும் உயர்ந்து வந்தது.
இதைத்தொடர்ந்து கடந்த 7-ந் தேதி அணையில் இருந்து 3-ம் மண்டல பாசனத்திற்கு 2-ம் சுற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் வெப்பத்தின் தாக்குதலில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்றுடன் 2ம் சுற்று தண்ணீர் முடிவடைந்ததையொட்டி பி.ஏ.பி. பிரதான கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று மதியம் அடைக்கப்பட்டது.
மழைப்பொழிவின் தாக்கம் குறைந்து விட்டதால் கடந்த சில மாதங்களாக மேற்குதொடர்ச்சி மலையில் மீண்டும் வறட்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக திருமூர்த்தி அணையின் முக்கிய நீர் ஆதாரங்களான தொகுப்பு அணைகளிலும் நீர்இருப்பு சரிந்து வருவதாக தெரிகிறது. ஆனாலும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தளி கால்வாய் மற்றும் ஏழுகுளங்களை ஆதாரமாகக் கொண்ட குடிநீர் திட்டங்களில் ஓரளவிற்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இதனால் தற்போதைய குடிநீர் தேவை பூர்த்தி அடைந்து வருகிறது. ஆனாலும் அணையில் நீர் இருப்பு குறைந்து வருவதால் குறைவான நீர்இருப்பை கொண்டு கோடைகால குடிநீர் தேவையை பூர்த்தி செய்யமுடியுமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனால் குடிநீர் திட்டங்களை நீர்ஆதாரமாக கொண்டுள்ள சுற்றுப்புற கிராமச் சேர்ந்த பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.
திருமூர்த்தி அணையின் மொத்த உயரம் 60 அடி ஆகும். நேற்று காலை நிலவரப்படி அணையில் 27.91 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு காண்டூர் கால்வாய் மூலமாக 873 கனஅடியும் பாலாற்றின் மூலமாக வினாடிக்கு 2 கனஅடி தண்ணீரும் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு பி.ஏ.பி. பிரதான கால்வாய் மூலமாக 380 கனஅடி தண்ணீரும் குடிநீருக்காக 28 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.

Related Tags :
Next Story