மாவட்டம் முழுவதும் ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி கேட்டு 1½ லட்சம் பேர் விண்ணப்பம் அதிகாரிகள் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசின் ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி கேட்டு சுமார் 1½ லட்சம் பேர் விண்ணப்பம் செய்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாமக்கல்,
வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் விவசாய தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபடும் ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு சிறப்பு நிதி ரூ.2 ஆயிரம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
இந்த நிதியை பெறுவதற்காக மாவட்டம் முழுவதும் கடந்த 3 நாட்களாக நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் தொழிலாளர்கள் விண்ணப்பங்களை வாங்கி வங்கி கணக்கு விவரம், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்து வழங்கி வந்தனர்.
கடைசிநாளான நேற்று நாமக்கல் நகராட்சியில் நீண்ட வரிசையில் காத்திருந்து தொழிலாளர்கள் விண்ணப்பங்களை கொடுத்தனர். கடந்த 3 நாட்களில் நாமக்கல் நகராட்சியில் மட்டும் 11,800 தொழிலாளர்கள் ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி கேட்டு விண்ணப்பம் கொடுத்து இருப்பதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல் மாவட்டம் முழுவதும் சுமார் 1½ லட்சம் பேர் விண்ணப்பங்கள் கொடுத்து இருப்பதாகவும், அவற்றின் எண்ணிக்கை துல்லியமாக கணக்கிடப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story