மக்கள் தொடர்பு முகாமில் ரூ.3 கோடி நலத்திட்ட உதவிகள்


மக்கள் தொடர்பு முகாமில் ரூ.3 கோடி நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 1 March 2019 3:15 AM IST (Updated: 28 Feb 2019 11:01 PM IST)
t-max-icont-min-icon

தேவம்பட்டு கிராமத்தில் தமிழக அரசின் வருவாய்த்துறை சார்பில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.

பொன்னேரி,

பொன்னேரி அருகே தேவம்பட்டு கிராமத்தில் தமிழக அரசின் வருவாய்த்துறை சார்பில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன் தலைமை தாங்கினார். இதில் ஆர்.டி.ஓ. நந்தகுமார் முன்னிலை வகித்தார். முன்னதாக தாசில்தார் புகழேந்தி வரவேற்று பேசினார்.

முகாமில் ரூ.3 கோடியே ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 334 மதிப்பில், ஆயிரத்து 109 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை மற்றும் இதர உதவித்தொகைகளை திருவள்ளூர் எம்.பி. வேணுகோபால், பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம்பலராமன் ஆகியோர் வழங்கினர். முகாமில் ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் ஸ்ரீதர், வட்டார வளர்ச்சி அலுவலர் வேதநாயகம், ஒன்றிய ஆணையாளர் கவுரி, தனி தாசில்தார் சங்கிலிரதி, மண்டல துணை தாசில்தார்கள் செல்வகுமார், அருள்வளவன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள், பயனாளிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story