குறைந்த விலையில் வீடு தருவதாக 3 பேரிடம் ரூ.81 லட்சம் மோசடி


குறைந்த விலையில் வீடு தருவதாக 3 பேரிடம் ரூ.81 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 1 March 2019 4:27 AM IST (Updated: 1 March 2019 4:27 AM IST)
t-max-icont-min-icon

குறைந்த விலையில் வீடு தருவதாக கூறி 3 பேரிடம் ரூ.81 லட்சம் மோசடி செய்த போலி ரியல் எஸ்டேட் ஏஜெண்டை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மும்பை காட்கோபரை சேர்ந்தவர் ஜித்தேந்திரா. இவர் கடந்த 2015-ம் ஆண்டு கிழக்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்க ஆசைப்பட்டார். இதற்காக அங்கு ரியல் எஸ்டேட் ஏஜெண்டாக இருந்து வந்த கர்சன் பட்டேலை அணுகினார்.

இதில் அவர் குறைந்த விலையில் வீடு தருவதாக கூறி ஜித்தேந்திரா மற்றும் அவரது சகோதரரிடம் இருந்து ரூ.65 லட்சத்தை பெற்று கொண்டார்.

இதில் கடந்த 2017-ம் ஆண்டு வரை அடுக்குமாடி குடியிருப்பில் அவரது பெயருக்கு வீடு ஒதுக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், ரியல் எஸ்டேட் ஏஜெண்டான கர்சன் பட்டேலிடம் சென்று விவரம் கேட்டு உள்ளார்.

அப்போது ரியல் எஸ்டேட் ஏஜெண்டு, நீங்கள் வெறும் ரூ.3 லட்சம் மட்டுமே தந்ததால் உங்களுக்கு வீடு ஒதுக்கப்படவில்லை என்றார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், கர்சன் பட்டேல் போலி ரியல் எஸ்டேட் ஏஜெண்டு என்பதும், குறைந்த விலையில் வீடு தருவதாக கூறி ஜித்தேந்திரா, அவரது சகோதரர் உள்பட 3 பேரிடம் இருந்து ரூ.81 லட்சம் மோசடி செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவருடன் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பதை கண்டுபிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story