பிளஸ்-2 தேர்வு இன்று தொடக்கம்: புதுச்சேரியில் 13 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்
`பிளஸ்-2 தேர்வு இன்று தொடங்குகிறது. புதுவை மாநிலத்தில் இந்த தேர்வினை 13 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள்.
புதுச்சேரி,
புதுவை பள்ளிக்கல்வி இயக்கக இணை இயக்குனர் குப்புசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மேல்நிலை 2-ம் ஆண்டு (பிளஸ்-2), முதலாம் ஆண்டு (பிளஸ்-1) மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தேர்வுத் துறையால் இன்று (வெள்ளிக் கிழமை) முதல் வருகிற 29-ந்தேதி வரை அறிவிக்கப்பட்ட தேர்வு கால அட்டவணைப்படி புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் நடத்தப்படுகிறது. இதற்காக புதுச்சேரி பகுதியில் 33 மேல்நிலை தேர்வு மையங்களும், 36 இடைநிலை தேர்வு மையங்களும் காரைக்காலில் 9 மேல்நிலை தேர்வு மையங்களும், 13 இடைநிலை தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மைய முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், பறக்கும்படை அலுவலர்கள், நிலையான படை அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள் மற்றும் அறை கண்காணிப்பாளர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வினை 44 அரசு மற்றும் 87 தனியார் பள்ளிகளை சேர்ந்த 12 ஆயிரத்து 567 மாணவ, மாணவிகளும், 1,184 தனித்தேர்வர்களும் எழுதுகின்றனர்.
பிளஸ்-1 தேர்வினை 12 ஆயிரத்து 299 பள்ளி மாணவ, மாணவிகளும், 114 தனித்தேர்வர்களும் எழுதுகின்றனர். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வினை 83 அரசு மற்றும் 156 தனியார் பள்ளிகளை சேர்ந்த 13 ஆயிரத்து 960 மாணவ, மாணவிகளும், 1,204 தனித்தேர்வர் களும் எழுதுகின்றனர்.
காரைக்காலில் பிளஸ்-2 தேர்வினை 10 அரசு மற்றும், 13 தனியார் பள்ளிகளை சேர்ந்த 2 ஆயிரத்து 398 மாணவ, மாணவிகளும், 266 தனித்தேர்வர்களும் எழுதுகின்றனர். பிளஸ்-1 தேர்வினை 2 ஆயிரத்து 378 மாணவ, மாணவிகளும், 21 தனித்தேர்வர்களும் எழுதுகின்றனர். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வினை 27 அரசுப் பள்ளிகள் மற்றும் 36 தனியார் பள்ளிகளை சேர்ந்த 2 ஆயிரத்து 369 மாணவ, மாணவிகளும் 300 தனித்தேர்வர்களும் எழுதுகின்றனர்.
ஒவ்வொரு தேர்வு மையத்துக்கும் பாதுகாப்பு, தடையில்லா மின்சார சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வெழுத வரும் தேர்வர்கள் செல்போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் எதையும் எடுத்துவர தடை செய்யப்பட்டுள்ளது.
தேர்வுக்கூட அனுமதி சீட்டு (ஹால்டிக்கெட்) இல்லாத மாணவர்கள் எக்காரணத்தை கொண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். தனித்தேர்வர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட ஒப்புகை சீட்டு எண் மற்றும் பிறந்த தேதியை வைத்து தனியார் கணினி மையம் மூலம் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பிளஸ்-2 பழைய பாடத்திட்டத்தில் (200 மதிப்பெண்) தேர்வெழுதும் தனித்தேர்வர்களுக்கு தனி தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தேர்வு அறையில் மற்றும் தேர்வு மையத்தில் ஒழுங்கீன செயலில் ஈடுபடும் தேர்வர்களுக்கு குற்றங்களுக்கு ஏற்ப தண்டனைகள் அளிக்கப்படும். எனவே தேர்வர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடாமல் இருத்தல் வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story