உத்திரமேரூர் அருகே கோழி பண்ணையில் போலி மது தயாரித்து விற்பனை 4 பேர் கைது
உத்திரமேரூர் அருகே கோழி பண்ணையில் போலி மது தயாரித்து விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
உத்திரமேரூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த அரசாணிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் காசி (வயது 65). அவருக்கு சொந்தமான கோழிபண்ணை ஒன்று அந்த பகுதியில் உள்ளது. இந்த கோழி பண்ணையில் போலி மது தயாரிக்கப்படுவதாக காஞ்சீபுரம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையொட்டி மதுவிலக்கு போலீசார் அந்த கோழிபண்ணையை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் அதிரடியாக கோழிபண்ணைக்குள் புகுந்து போலீசார் சோதனை நடத்தினர். அங்கு போலி மது வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
போலி மது தயாரித்து விற்பனையில் ஈடுபட்ட கோழிபண்ணை உரிமையாளர் காசி, செஞ்சியை சேர்ந்த சண்முகவேல் (46), வேலூரை சேர்ந்த பழனி (26), திருவண்ணாமலையை சேர்ந்த கார்த்திகேயன் (37) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவான சிவா (40) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பண்ணையில் இருந்து 1250 லிட்டர் எரிசாராயம் மற்றும் 4 கார்களை போலீசார் கைப்பற்றினர். இங்கு தயார் செய்யப்பட்ட போலி மதுபானங்கள் எந்தெந்த பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டது என்றும், மேலும் வேறு யார் யாருக்கு இதனுடன் தொடர்பு உள்ளது என்ற கோணங்களிலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story