கிருஷ்ணகிரியில் ரேஷன்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


கிருஷ்ணகிரியில் ரேஷன்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 March 2019 3:45 AM IST (Updated: 2 March 2019 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை முன்பு, தமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியாளர் சங்கத்தின் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சோமேஸ்வரன் தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலாளர் சங்கர் முன்னிலை வகித்தார். பட்டு வளர்ச்சி துறை மாநில துணைத்தலைவர் கிருஷ்ணன் கோரிக்கைகள் குறித்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தின் போது, டி.என்.சி.எஸ்.சி.,க்கு இணையான ஊதியம், ஓய்வூதியம், தனித்துறை, பணி வரன்முறை மற்றும் பொட்டல முறை உள்ளிட்ட கோரிக்கை பரிசீலனை குழுவின் அறிக்கை மீது பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினார்கள். இதில், சங்க நிர்வாகிகள் பாலசுந்தரம், நாகேஷ், நித்தியானந்தம் உள்பட ரேஷன் கடை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story