தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 March 2019 4:15 AM IST (Updated: 3 March 2019 12:44 AM IST)
t-max-icont-min-icon

தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து நாகையில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

தேர்தல் பணிகளுக்காக தாசில்தார்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை கண்டித்தும், மாறுதலை ரத்து செய்ய வலியுறுத்தியும் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட துணை தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அமுதவிஜயரங்கன், செயலாளர் ஹரிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் சிவகுமார், துணை தலைவர் குமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

தேர்தல் பணிகளுக்காக தாசில்தார்களை இடமாற்றம் செய்யதுள்ளதை ரத்து செய்ய வேண்டும் என வலியுறத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story