கோவில்பட்டியில் பா.ஜ.க.வினர் மோட்டார் சைக்கிள் பேரணி


கோவில்பட்டியில் பா.ஜ.க.வினர் மோட்டார் சைக்கிள் பேரணி
x
தினத்தந்தி 3 March 2019 3:30 AM IST (Updated: 3 March 2019 2:46 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் பா.ஜ.க.வினர் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினர்.

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் பா.ஜ.க. இளைஞர் அணி சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க எழுச்சி மோட்டார் சைக்கிள் பேரணி நேற்று நடந்தது. மாநில துணை தலைவர் சுப.நாகராஜன் கொடி அசைத்து மோட்டார் சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார்.

கோவில்பட்டி இனாம் மணியாச்சி சந்திப்பில் இருந்து பா.ஜ.க.வினர் மோட்டார் சைக்கிளில் அணிவகுத்து சென்றனர். கோவில்பட்டி மெயின் ரோடு, புது ரோடு, எட்டயபுரம் ரோடு வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் பேரணி காந்தி மைதானத்தில் நிறைவு அடைந்தது.

மாவட்ட தலைவர் பாலாஜி, மாவட்ட செயலாளர் நாராயணன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் மாரிசெல்வம், துணை தலைவர் தினேஷ், நகர தலைவர்கள் காளிதாசன், வேல்ராஜா, திருப்பதி, ராஜா, ஒன்றிய தலைவர் கணபதி, மாவட்ட மகளிர் அணி பொதுச்செயலாளர் கோமதி, ஒன்றிய மகளிர் அணி தலைவி பாலம்மாள், மாவட்ட துணை தலைவர் போஸ், ஒன்றிய பொதுச்செயலாளர்கள் மாரிமுத்து, குமார், நகர பொதுச்செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், தினேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story