பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. இணையும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. இணையும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் கலந்து கொள்வதற்காக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மண்டைக்காட்டுக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. நிச்சயம் இணையும். அது தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. இன்னும் ஓரிரு தினங்களில் முடிவு தெரிந்து விடும். அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணிதான் வெற்றி கூட்டணி.
தி.மு.க. கூட்டணியில், இந்திய ஜனநாயக கட்சி இணைந்திருப்பதால் பா.ஜனதாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. பார்ப்பதற்கு பிரமாண்டம் போல் காட்சி தரும் தி.மு.க. கூட்டணி பண்டம் இல்லாத காலி டப்பா.
தமிழகம் முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக பிரசாரம் செய்து வரும் பி.ஆர். பாண்டியன் அரசியல் பின்புலம் உடையவர். விவசாயிகளின் தலைவராக அல்லாமல், அரசியல் உள்நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார்.
மத சார்பின்மைக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக நாஞ்சில் சம்பத் கூறியிருக்கிறார். அரசியலை விட்டு ஒதுங்குவதாக கூறிய நாஞ்சில் சம்பத் மீண்டும் வந்திருப்பதால் தமிழக மக்களுக்கு மாரடைப்பு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.
பாகிஸ்தான் மீதான தாக்குதல் சம்பவத்தை வைத்து பா.ஜனதா அரசியல் செய்வதாக கூறுவது சரியல்ல. பாகிஸ்தான் மீது தாக்குதல் தொடுத்ததன் மூலம் கிடைத்த வெற்றியை அறிவிக்கும் கடமை பிரதமருக்கு உள்ளது. வெற்றியை கொண்டாடும் முதல் கடமை பிரதமருக்கும், 2-வது கடமை எதிர்க்கட்சிகளுக்கும், 3-வது அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும், 4-வது கடமை மக்களுக்கும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story