மத்திய அரசின் சாதனைகளை விளக்கி பா.ஜனதா கட்சியினர் மோட்டார் சைக்கிள் ஊர்வலம்


மத்திய அரசின் சாதனைகளை விளக்கி பா.ஜனதா கட்சியினர் மோட்டார் சைக்கிள் ஊர்வலம்
x
தினத்தந்தி 3 March 2019 10:45 PM GMT (Updated: 2019-03-04T00:38:37+05:30)

மத்திய அரசின் சாதனைகளை விளக்கி பா.ஜனதா கட்சி சார்பில் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது.

சுந்தரக்கோட்டை,

பா.ஜனதா கட்சியின் சார்பில் நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்கள் மத்திய அரசின் சாதனைகளை விளக்கியும், மீண்டும் பிரதமராக மோடி வரவேண்டும் என உறுதி எடுக்கும் விதமாக மோட்டார்சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் பா.ஜனதா கட்சி சார்பில் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நீடாமங்கலத்தில் தொடங்கி மன்னார்குடி வரை நடைபெற்றது.

நீடாமங்கலத்தில் நடந்த தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட பொதுச்செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். கோட்ட இணை பொறுப்பாளர் கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் காமராஜ், மாவட்ட துணை தலைவர் மோகன், மருத்துவ பிரிவு தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக சட்டமன்ற பொறுப்பாளர் அறிவுராம் வரவேற்றார். ஊர்வலத்தை மாநில பொதுச்செயலாளர் கருப்புமுருகானந்தம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தஞ்சை பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் இளங்கோ பேசினார். இதில் மாவட்ட துணைத்தலைவர் பரந்தாமன் உள்பட 250 பேர் கலந்து கொண்டனர். ஊர்வலம் மன்னார்குடி தேரடியில் நிறைவடைந்தது. முடிவில் மன்னார்குடி நகர தை-லைவர் பால.பாஸ்கர் நன்றி கூறினார்.

Next Story