வேளாண்மை அலுவலர் சங்க கூட்டம்


வேளாண்மை அலுவலர் சங்க கூட்டம்
x
தினத்தந்தி 4 March 2019 4:00 AM IST (Updated: 4 March 2019 1:44 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர் சங்க அரியலூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

ஜெயங்கொண்டம்,

தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர் சங்க அரியலூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தமிழ்செல்வன் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர் ராஜதுரை முன்னிலை வகித்தார். மாவட்ட தொழிற்சங்க தலைவர் கொளஞ்சி வரவேற்றார். மாநில தலைவர் அருண், முன்னாள் மாவட்ட தலைவர் இளவரசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் நுண்ணீர் பாசன திட்டத்திற்கு இலக்கு நிர்ணயித்து அதனை முடிக்க கட்டாயப்படுத்தப்படும் நடவடிக்கையை கைவிட வேண்டும். பயிர் காப்பீடு திட்ட இலக்கை நிர்ணயிக்கும் நடைமுறையை கைவிட வேண்டும். மானிய இடுபொருட்களை நிதி ஆண்டு தொடக்கத்திலேயே கிடங்கில் இருப்பு வைக்க வேண்டும். ஒப்பந்த பணியாளர்களை தவிர்க்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் முருகன், மாவட்ட மகளிரணி செயலாளர் மலர்கொடி, மாநில பொது செயலாளர் வெங்கடேசன், மாநில துணை தலைவர் சொர்ணராஜன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் முரசொலி, மாநில பொருளாளர் சிவந்திராசு உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story