போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 March 2019 10:45 PM GMT (Updated: 4 March 2019 4:29 PM GMT)

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சங்கங்களில் ஒன்றான எச்.எம்.எஸ். சார்பில் நாகர்கோவில் ராணிதோட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாகர்கோவில்,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சங்கங்களில் ஒன்றான எச்.எம்.எஸ். சார்பில் நாகர்கோவில் ராணிதோட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. வழிதடங்களில் இயக்க வேண்டிய பஸ்களை இயக்காமல் முடக்கி வைத்திருப்பதை மாற்றி அனைத்து தடங்களிலும் பஸ்கள் இயக்க வேண்டும், வேலை நிறுத்தத்தை காரணம் காட்டி 4 தொழிலாளர்கள் இடமாற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும், வழித்தட நீட்டிப்பு, வருகை பதிவு குறைப்பு, பேட்டா மற்றும் மிகை நேர பணிகளுக்கு பேட்டா குறைப்பு போன்றவற்றை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்துக்கு எச்.எம்.எஸ். தொழிற்சங்க போக்குவரத்து பேரவை பொதுச்செயலாளர் சுப்பிரமணிய பிள்ளை தலைமை தாங்கினார். முத்துகருப்பன், லெட்சுமணன், சந்திரகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களையும் எழுப்பினர்.

Next Story