வலசுப்பாளையம் கிராமத்தில் மதுக்கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு கலெக்டரிடம் மனு


வலசுப்பாளையம் கிராமத்தில் மதுக்கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 5 March 2019 4:00 AM IST (Updated: 4 March 2019 11:06 PM IST)
t-max-icont-min-icon

வலசுப்பாளையம் கிராமத்தில் மதுக்கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா இருக்கூர் அருகே உள்ள வலசுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மதுக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

வலசுப்பாளையத்தில் உள்ள கபிலர்மலை செல்லும் சாலையில் புதிதாக அரசு மதுக்கடை தொடங்க வேலைகள் நடைபெற்று வருகிறது. புதிதாக தொடங்க உள்ள மதுக்கடை அருகில் குடியிருப்புகளும், தனியார் பள்ளியும், விவசாய நிலங்களும் இருப்பதால், இது மதுக்கடை அமைக்க ஏற்றம் இடம் இல்லை.

இங்கு மதுக்கடை அமைத்தால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பதால், மதுக் கடை அமைக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதை பொருட்படுத்தாமல் மதுக் கடை தொடங்கப்பட்டால் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை வரும். எனவே அங்கு மதுக்கடை அமைப்பதை தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.

Next Story