தேன்கனிக்கோட்டை அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்; வாலிபர் கைது
தேன்கனிக்கோட்டை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவள் 15 வயது சிறுமி. இவள் 8-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தாள். கடந்த 2-ந் தேதி இரவு அந்த கிராமத்தில் நாடக நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதனை காண்பதற்காக சிறுமியின் தாய் சென்றிருந்தார்.
இந்த நிலையில் தனது தாயை அழைத்து வருவதற்காக இரவு 11 மணியளவில் அந்த சிறுமி அங்கு நடந்து சென்று கொண்டிருந்தாள். அப்போது அங்குள்ள வனப்பகுதியை ஒட்டி அக்கொண்டப்பள்ளியை சேர்ந்த மூர்த்தி (வயது 23) என்பவர் நின்று கொண்டிருந்தார். சிறுமி தனியாக வருவதை பார்த்த அவர் திடீரென அவளை தூக்கி கொண்டு ஓடினார்.
சிறுமி பயத்தில் கூச்சலிட்டாள். இதனால் அவளது வாயை மூடி மறைவான இடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து விட்டு மூர்த்தி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து சிறுமி அழுது கொண்டே தனது தாயிடம் கூறியுள்ளாள். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது தொடர்பாக தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தா போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து மூர்த்தியை கைது செய்தார்.
Related Tags :
Next Story