கட்டிட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


கட்டிட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 March 2019 4:00 AM IST (Updated: 5 March 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் அண்ணாசிலை அருகில் ஏ.ஐ.டி.யூ.சி. கட்டிட தொழிலாளர்கள் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரியலூர்,

அரியலூர் அண்ணாசிலை அருகில் ஏ.ஐ.டி.யூ.சி. கட்டிட தொழிலாளர்கள் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கட்டிட தொழிலாளர்களுக்கு இலவச வீடு வழங்க வேண்டும். விபத்து மரண இழப்பு, குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை ஆகியவை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் தண்டபாணி, உலகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலெட்சுமியிடம் கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story