ஓய்வூதியம் ரூ.6 ஆயிரம் வழங்க கோரி கட்டிட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.6 ஆயிரம் வழங்க கோரி கட்டிட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
திருச்சி,
தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில துணை தலைவர் மருதாம்பாள் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் சுரேஷ் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் வீடற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடுகட்டிதர வேண்டும், குறைந்த பட்ச ஓய்வூதியம் மாதம் ரூ.6 ஆயிரம் வழங்கவேண்டும். பேறுகால பயனாக 6 மாத குறைந்த பட்ச சம்பளத்துக்கு ஈடாக ரூ.90 ஆயிரம் வழங்கவேண்டும். இயற்கை மரணத்துக்கு ரூ.5 லட்சம், விபத்து மரணத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கவேண்டும்.
குழந்தைகளின் கல்வி செலவு முழுமையாக ஏற்கப்படவேண்டும். திருமண உதவி தொகையை ரூ.1 லட்சமாக உயர்த்தி தரவேண்டும். விபத்து சிகிச்சைக்கும், சிகிச்சை காலத்திற்கும் நிவாரணம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கோரிக்கைகளை விளக்கி சங்க நிர்வாகிகள் சண்முகம், முருகன், ஆரோக்கியம், துரைராஜ் ஆகியோர் பேசினார்கள். முடிவில் சிவா நன்றி கூறினார்.

Related Tags :
Next Story