திருமங்கலம்-ஆலங்குடி இடையே ரூ.4½ கோடியில் புதிய தார்சாலை அமைக்கும் பணி


திருமங்கலம்-ஆலங்குடி இடையே ரூ.4½ கோடியில் புதிய தார்சாலை அமைக்கும் பணி
x
தினத்தந்தி 6 March 2019 10:30 PM GMT (Updated: 2019-03-07T00:47:59+05:30)

திருமங்கலம்-ஆலங்குடி இடையே ரூ.4 கோடியே 64 லட்சத்தில் புதிய தார்சாலை அமைக்கும் பணியை ராதா கிருஷ்ணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

குத்தாலம்,

மயிலாடுதுறை அருகே திருமங்கலத்தில் புதிய தார்சாலை அமைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, தார்சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரூ.4½ கோடியில்

மயிலாடுதுறை அருகே திருமங்கலத்தில் இருந்து முருகமங்கலம் வழியாக ஆலங்குடி வரை செல்லும் 5 கி.மீட்டர் தூரம் கொண்ட இந்த சாலை கடந்த சில ஆண்டு களாக சேதமடைந்து காணப்பட்டது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.4 கோடியே 64 லட்சம் மதிப்பீட்டில் 5 கி.மீட்டர் தொலைவில் புதிய தார்சாலை அமைக்கப்பட உள்ளது. மேலும் 8 பாலங்களும், சாலை குறுகலாக உள்ள பகுதியில் அகலப்படுத்திடவும் இந்த திட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பிரவீன்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பரமசிவம், ராமதாஸ், முன்னாள் கவுன்சிலர் ரமேஷ், அ.தி.மு.க. பிரமுகர் லோக நாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story