கிருஷ்ணகிரியில் தொழில் அதிபர் வீட்டில் 16 பவுன் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


கிருஷ்ணகிரியில் தொழில் அதிபர் வீட்டில் 16 பவுன் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 7 March 2019 4:15 AM IST (Updated: 7 March 2019 12:49 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் தொழில் அதிபர் வீட்டில் 16 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகர் 2-வது கிராஸ் பகுதியை சேர்ந்த முகேஷ் ஜிந்தால்(வயது 42). தொழில் அதிபர். இவர் தனது சொந்த வேலையாக விஷயமாக குடும்பத்துடன் கடந்த பிப்ரவரி மாதம் 27-ந் தேதி வெளியூருக்கு சென்றார். பின்னர் சம்பவத்தன்று அவர் தனது குடும்பத்தினருடன் வீட்டிற்கு திரும்பினார்.

அப்போது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 16 பவுன் நகைகளை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து முகேஷ் ஜிந்தால் கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். தொழில் அதிபர் வீட்டில் 16 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story