படிக்கட்டுகளில் பயணம் செய்தவர்களை கண்டிக்காத அரசு பஸ் டிரைவர்-கண்டக்டர் மீது வழக்கு


படிக்கட்டுகளில் பயணம் செய்தவர்களை கண்டிக்காத அரசு பஸ் டிரைவர்-கண்டக்டர் மீது வழக்கு
x
தினத்தந்தி 6 March 2019 10:15 PM GMT (Updated: 2019-03-07T01:42:37+05:30)

அரியலூர் முதல் கீழப்பழுவூர் வரை செல்லும் சாலையில் அரியலூர் வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெயதேவராஜ் நேற்று திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டார்.

அரியலூர்,

அரியலூர் முதல் கீழப்பழுவூர் வரை செல்லும் சாலையில் அரியலூர் வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெயதேவராஜ் நேற்று திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்றின் படிகட்டுகளிலும், பின்புற ஏணிகளிலும் நின்று கொண்டு சிலர் பயணம் செய்தனர். இதனை கண்ட ஜெயதேவராஜ், பஸ் படிகட்டுகளில் மற்றும் ஏணிகளில் நின்று கொண்டு பயணம் செய்தவர்களை கண்டிக்காத, அந்த பஸ்சின் டிரைவர், கண்டக்டர் மீது கீழப்பழுவூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், அவர்கள் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பஸ் படிக்கட்டுகள் மற்றும் ஏணிகளில் நின்று பயணம் செய்தவர்களை வட்டார போக்குவரத்து அதிகாரி எச்சரித்து அனுப்பி வைத்தார். 

Next Story