ஸ்ரீவில்லிபுத்தூரில் பயங்கரம் தாயிடம் தகராறு செய்த வாலிபர் கிரிக்கெட் மட்டையால் அடித்துக்கொலை தாய் மாமன் கைது
ஸ்ரீவில்லிபுத்தூரில் தாயிடம் தகராறு செய்த வாலிபர் கிரிக்கெட் மட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். அவரை கொன்ற தாய்மாமன் கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் இடையபொட்டல் தெரு இல்லத்தார் நகரை சேர்ந்தவர், முருகன். அவருடைய மனைவி கோவிந்தம்மாள் (வயது52). இவர்களுடைய மகன் அங்குராஜ் (22). மதுகுடிக்கும் பழக்கம் உள்ள அங்குராஜ் குடித்துவிட்டு தாயாரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதேபோலும் நேற்று குடிபோதையில் வீட்டுக்கு வந்த அவர் தாயாரிடம் தகராறில் ஈடுபட்டார். இதனை அதே பகுதியில் வசிக்கும் கோவிந்தம்மாளின் சகோதரரான லட்சுமணன்(52) தட்டிக்கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த லட்சுமணன் அங்கிருந்த கிரிக்கெட் மட்டையை எடுத்து அங்குராஜை தாக்கியுள்ளார். தலையில் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த அங்குராஜ் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பலியானார்.
கைது தகவல் அறிந்த நகர்போலீசார் விசாரணை மேற்கொண்டு அங்குராஜ் உடலை பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லட்சுமணனை கைது செய்தனர். வாலிபரை தாய்மாமன் அடித்துக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.Related Tags :
Next Story