செங்கல்பட்டு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; என்ஜினீயர் உள்பட 2 பேர் பலி


செங்கல்பட்டு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; என்ஜினீயர் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 8 March 2019 4:15 AM IST (Updated: 8 March 2019 12:15 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் என்ஜினீயர் உள்பட 2 பேர் பலியானார்.

செங்கல்பட்டு,

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சி 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கணேஷ். இவரது மகன் யோகேஷ் (வயது 23). இவர் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

புலிப்பாக்கம் அருகே வரும்போது சென்னை வளசரவாக்கம் எஸ்.வி.எஸ். நகர் 8-வது தெருவைச் சேர்ந்த வினோத் (29) எதிரே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இருவரது மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இதில் யோகேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த வினோத் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

விபத்தில் பலியான வினோத் சிங்கபெருமாள் கோவில் அருகே உள்ள மகேந்திரா சிட்டியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story