ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் 5-வது நாளாக காத்திருப்பு போராட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கரியாப்பட்டினத்தில் விவசாயிகள் 5-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம்,
டெல்டா மாவட்டமான திருவாரூர் மாவட்டம் திருகாரவாசல் முதல் நாகை மாவட்டம் கரியாப்பட்டினம் வரை ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஏல அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் விளைநிலங்கள் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் என்பதால் இந்த திட்டத்திற்கு எதிர்பு தெரிவித்து கரியாப்பட்டினத்தில் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் சரவணமுத்து தலைமையில் விவசாயிகள் நேற்று 5-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் நாகை மாவட்ட தி.மு.க. செயலாளர்் கவுதமன், ஒன்றிய செயலாளர்கள் கவிஞர் மாசி, குமரவேல், நகர செயலாளர் புகழேந்தி உள்பட ஒன்றிய தி.மு.க. வினர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.

Related Tags :
Next Story