துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது சரக்கு ஆட்டோ கவிழ்ந்து முதியவர் பலி 20 பேர் காயம்


துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது சரக்கு ஆட்டோ கவிழ்ந்து முதியவர் பலி 20 பேர் காயம்
x
தினத்தந்தி 8 March 2019 4:15 AM IST (Updated: 8 March 2019 1:17 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரமங்கலம் அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது சரக்கு ஆட்டோ கவிழ்ந்து 20 பேர் காயம் அடைந்தனர். இதில் முதியவர் பலியானார்.

விக்கிரமங்கலம்,

அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி அருகே உள்ள குருவாடி கிராமத்தை சேர்ந்த 21 பேர், அரியலூரில் உறவினர் ஒருவர் இறந்த துக்க நிகழ்ச்சிக்கு ஒரு சரக்கு ஆட்டோவில் நேற்று காலை சென்றனர். சரக்கு ஆட்டோவை தஞ்சை மாவட்டம், பாபநாசத்தை சேர்ந்த பாபு என்பவர் ஓட்டி சென்றார். விக்கிரமங்கலம் அருகே உள்ள கடம்பூர் கிராமத்தின் அருகே சரக்கு ஆட்டோ சென்று கொண்டு இருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ஆட்டோ சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் சரக்கு ஆட்டோவில் பயணம் செய்த கருணாநிதி(வயது57), லட்சுமி(38), பூங்கொடி(48), கொளஞ்சியம்மாள்(38), திவ்யா(24), பானுமதி(45), செல்லம்மாள்(40), பாலமுருகன்(55), மகாதேவி(35), கர்ப்புகரசி(27), கவுரி(45), கனிமொழி(27), வசந்தா(36), ராணி(45), மேனகா(38), ரெங்கநாயகி(52), புவனேஷ்வரி(27), ராமசாமி(50), கீர்த்திகா(22), மருதம்பாள்(55) உள்பட 21 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த விக்கிரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் நடராஜன்(62) மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடியே சரக்கு ஆட்டோ டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story