மாவட்ட செய்திகள்

கொசுவலை நிறுவனங்கள்- அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை கரூரில் பரபரப்பு + "||" + KOSUVALI ORGANIZATIONS - Income Tax Inspections in the Office of Experts

கொசுவலை நிறுவனங்கள்- அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை கரூரில் பரபரப்பு

கொசுவலை நிறுவனங்கள்- அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை கரூரில் பரபரப்பு
வரி ஏய்ப்பு புகாரை தொடர்ந்து, கரூரில் உள்ள பிரபல குழுமத்துக்கு சொந்தமான கொசுவலை நிறுவனங்கள் மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர்,

கரூரில் உள்ள ஒரு பிரபல குழுமத்துக்கு சொந்தமாக கொசுவலை நிறுவனம், பால்பண்ணை, பஸ்கள் உள்ளிட்டவை உள்ளன. இந்த நிலையில் அந்த குழுமத்துக்கு சொந்தமான கொசுவலை நிறுவனம் உள்ளிட்டவற்றில் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக திருச்சியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு புகார் வந்தது.


இதைத்தொடர்ந்து திருச்சியில் இருந்து கார்களில் 30-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறையினர் நேற்று இரவு 7 மணியளவில் கரூர் வந்தனர். அவர்கள், கரூர் அதிகாரிகளுடன் சேர்ந்து, தனித்தனி குழுக்களாக கரூர் மண்மங்கலம் சேலம் பைபாசில் சிப்காட்டில் உள்ள அந்த குழுமத்துக்கு சொந்தமான கொசுவலை நிறுவனம், சின்னஆண்டாங்கோவில் ரோடு சேரன் நகரில் உள்ள அலுவலகம், வீரராக்கியத்தில் உள்ள கொசுவலை நிறுவனம் உள்ளிட்டவற்றில் புகுந்து அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கொசுவலை ஏற்றுமதி செய்யப்பட்டதற்கான ஆவணங்களை கொண்டு, அதற்கான பணப்பரிமாற்றத்தில் முறைப்படி வரி செலுத்தப்பட்டு இருக்கிறதா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வரி ஏய்ப்பு தொடர்பான ஆவணங்கள் ஏதும் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா? என்று நிறுவனங்கள், அலுவலகத்தில் தீவிரமாக இரவு முழுவதும் சோதனை நடந்தது. இன்றும் (வெள்ளிக்கிழமை) சோதனை தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. துரைமுருகன் வீட்டில் நடந்த சோதனை: வருமான வரித்துறை அறிக்கை அடிப்படையில் தேர்தல் கமிஷன் முடிவு
துரைமுருகன் வீட்டில் நடந்த சோதனை தொடர்பான வருமான வரித்துறையின் அறிக்கை அடிப்படையில் தேர்தல் கமிஷன் முடிவெடுத்துள்ளது.
2. மம்தா உறவுப்பெண்ணை சோதனையிட்ட அதிகாரிகளுக்கு மிரட்டல்: மேற்கு வங்காள அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
மேற்கு வங்காள மாநில முதல்–மந்திரி மம்தா பானர்ஜியின் மருமகன் ஒருவர், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யாக இருக்கிறார்.
3. கரூரில் இயங்கி வரும் தனியார் நூல் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை
கரூரில் இயங்கி வரும் தனியார் நூல் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
4. திருச்சிற்றம்பலம் அருகே கூரை வீடுகளில் தீப்பிடிக்க ரசாயன பொடி காரணமா? தடயவியல் நிபுணர்கள் சோதனை
திருச்சிற்றம்பலம் அருகே கூரை வீடுகளில் தீப்பிடிக்க ரசாயன பொடி காரணமா? என்பது பற்றி தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
5. தஞ்சையில், மினிலாரியில் ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2 லட்சம் பறிமுதல்
தஞ்சையில், மினிலாரியில் ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.