திருவள்ளூர் அருகே தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பலி


திருவள்ளூர் அருகே தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பலி
x
தினத்தந்தி 9 March 2019 4:07 AM IST (Updated: 9 March 2019 4:07 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பெருமாள்பட்டை சேர்ந்தவர் முருகையன். இவரது மகன் சக்திபிரசாந்த் (வயது 23). இவர் சென்னையில் உள்ள பல் மருத்துவ கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சக்திபிரசாந்த் வேலையின் காரணமாக தனது மோட்டார்சைக்கிளில் பூந்தமல்லி நோக்கி சென்று கொண்டிருந்தார். திருவள்ளூரை அடுத்த நேமம் சாலையில் சென்றபோது அங்குள்ள தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சக்திபிரசாந்த் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story