10 நாட்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் பணம், நகையுடன் மணப்பெண் மாயம் போலீசில் தாய் புகார்


10 நாட்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் பணம், நகையுடன் மணப்பெண் மாயம் போலீசில் தாய் புகார்
x
தினத்தந்தி 10 March 2019 3:30 AM IST (Updated: 10 March 2019 12:46 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் அருகே 10 நாட்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் பணம் நகையுடன் மணப்பெண் மாயமானார்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சாரங்கபாணி சன்னதி தெருவை சேர்ந்தவர் ரூஸ்வெல்ட். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ராஜலெட்சுமி. இவர்களது மகள் மோனிஷா(வயது21). இவருக்கு இன்னும் 10 நாட்களில் திருமணம் நடைபெற இருந்தது. கடந்த 7-ந்தேதி இரவு மோனிஷா தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். மறுநாள் காலை அவரை காணவில்லை. மேலும் வீட்டில் இருந்த 20 பவுன் நகை, ரூ.1 லட்சத்து50 ஆயிரம், மொபட் ஆகியவையும் மாயமாகி இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் பல இடங்களில் மோனிஷாவை தேடினர். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து மோனிஷாவின் தாய் ராஜலெட்சுமி கும்பகோணம் கிழக்கு போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் மோனிஷாவை தேடி வருகிறார்கள். 10 நாட்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணப்பெண் நகை- பணம் மற்றும் மொபட்டுடன் மாயமான சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story