மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 1,911 வழக்குகளுக்கு தீர்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 1,911 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
தூத்துக்குடி,
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரில், தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், விளாத்திகுளம் கோர்ட்டுகளில் நேற்று மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. மொத்தம் 18 அமர்வுகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
தூத்துக்குடியில் மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி சுரேஷ் விசுவநாத் தொடங்கி வைத்தார். 2-வது கூடுதல் மாவட்ட நீதிபதி கவுதமன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பகவதியம்மாள், சார்பு நீதிபதி செல்வம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஹசன் முகமது, குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் அண்ணாமலை, பிஸ்மிதா, தமிழ்ச்செல்வி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி சாமுவேல் பெஞ்சமின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நீதிமன்ற நிலுவையில் உள்ள வழக்குகளில் 4 ஆயிரத்து 116 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 1,733 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.6 கோடியே 77 லட்சத்து 48 ஆயிரத்து 946 பைசல் செய்யப்பட்டது. அதேபோல் வங்கி வராக்கடன் வழக்குகளில் 1,400 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 178 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.1 கோடியே 23 லட்சத்து 58 ஆயிரத்து 339 பைசல் செய்யப்பட்டது. மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மொத்தம் 1,911 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.8 கோடியே 1 லட்சத்து 7 ஆயிரத்து 285 பைசல் செய்யப்பட்டது.
இந்த தகவலை சார்பு நீதிபதி சாமுவேல் பெஞ்சமின் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story