திருவள்ளூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து கோரிக்கை மனுக்களை பெற பெட்டி வைக்கப்பட்டது
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் திருவள்ளூரில் நேற்று நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற தனியாக பெட்டி ஒன்று வைக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர்,
மாவட்ட தலைநகராக விளங்கும் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மாவட்ட கலெக்டர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் திரளான பொதுமக்கள் மாவட்ட கலெக்டரை நேரடியாக சந்தித்து தங்கள் குறைகளை கூறி கோரிக்கை மனுக்களை அளித்து வந்தனர்.
இந்தநிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என்று நேற்று முன்தினம் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. அதைத்தொடர்ந்து அனைத்து அரசு கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை என்பதால் இதை அறியாத பொதுமக்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனுக்களுடன் வந்தனர். அப்போது அங்கிருந்த அரசு அதிகாரிகள் பொதுமக்களிடம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து கலெக் டர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கின் அருகில் பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கை மனுக்களை பெற ஏதுவாக கோரிக்கை பெட்டி ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இந்த பெட்டியில் திரளான பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை போட்டுவிட்டு சென்றனர்.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான மகேஸ்வரி ரவிக்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தால் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2019 அட்டவணை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகளின்படி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மனுநீதிநாள் கூட்டம், அம்மா திட்டம் உள்ளிட்ட அனைத்து அரசு சார்ந்த கூட்டங்களும், தேர்தல் நடத்தை விதிகள் நிறைவு பெறும் வரை நடைபெறாது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

Related Tags :
Next Story