தோழி இறந்த சோகத்தில் விபரீதம் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
திருத்தணியில் பிளஸ்-2 மாணவி அவரது தோழி இறந்த சோகத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருத்தணி,
திருத்தணியில் உள்ள மத்தூரை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகள் ஜனனி (வயது 17). இவர் அங்குள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் பொதுத்தேர்வு நடந்து வருவதால், நேற்று முன்தினம் இரவு வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு படிக்க சென்றார். காலை விடிந்து நீண்டநேரம் ஆகியும் அவர் கீழே இறங்கி வராததால் பெற்றோர் மாடியில் உள்ள அறைக்கு சென்று பார்த்த னர். அப்போது அங்கு ஜனனி மின்விசிறியில் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த திருத்தணி போலீசார் விரைந்து சென்று ஜனனியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவி ஜனனியின் தோழி ஒருவர் இறந்து போனார். இதனால் அவர், மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் மாணவி ஜனனி தற்கொலை செய்திருக்கலாம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாணவி ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story