தர்மபுரி விஜய் வித்யாலயா கல்லூரியில் உலக மகளிர் தின விழா கொண்டாட்டம்


தர்மபுரி விஜய் வித்யாலயா கல்லூரியில் உலக மகளிர் தின விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 12 March 2019 4:22 AM IST (Updated: 12 March 2019 4:22 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியை அடுத்த நல்லம்பள்ளியில் உள்ள ஸ்ரீ விஜய் வித்யாலயா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

தர்மபுரி,

தர்மபுரியை அடுத்த நல்லம்பள்ளியில் உள்ள ஸ்ரீ விஜய் வித்யாலயா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கல்லூரி தலைவர் டி.என்.சி.மணிவண்ணன் தலைமை தாங்கினார். தாளாளர் செல்வி மணிவண்ணன், இயக்குனர் தீபக் மணிவண்ணன், நிர்வாக அலுவலர் கே.விக்ரமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி மாணவி கே.மஞ்சு வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் ஹமீதாபானு, துணை முதல்வர் பாலசுந்தரம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தி பேசினர். விழாவில் பென்னாகரம் துணை போலீஸ் சூப்பிரண்டு மேகலா, தர்மபுரி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா, ரோட்டரி சங்க முன்னாள் துணை ஆளுநர் கண்ணன், தர்மபுரி மிட்டவுன் ரோட்டரி சங்க தலைவர் கோவிந்தராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மகளிர் தினத்தையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டி பேசினார்.

நிகழ்ச்சிகளை மாணவிகள் சவுமித்ரா, சந்தியா ஆகியோர் தொகுத்து வழங்கினர். முடிவில் மாணவி சித்ரா நன்றி கூறினார்.

Next Story