குடிசை மாற்று வாரிய கட்டுமான பணியால் வீடுகளில் விரிசல் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
மணலி புதுநகரில் குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ராட்சத எந்திரங்களால் ஆழ்துளை பள்ளம் எடுப்பதால் அருகே உள்ள வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது. இதனை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீஞ்சூர்,
மீஞ்சூர் அருகே மணலி புதுநகரில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் மூலம் வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு கடந்த 1980-ம் ஆண்டு முதல் தற்போது வரை நிலங்களை கையகப்படுத்தி குடியிருப்பு மனைகளில் வீடுகள் கட்டி விற்பனை செய்யப்படுகிறது. மணலி புதுநகர் பஸ் நிலையத்திற்கு அருகே இருந்த நிலத்தை கடந்த 1994-ம் ஆண்டு கையகப்படுத்தி குடிசை மாற்று வாரியத்திற்கு நலிவுற்ற பிரிவினருக்காக வீடு கட்டும் திட்டத்திற்காக இட உரிமை மாற்றம் செய்யப்பட்டது.
குடிசை மாற்று வாரியம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் இடத்திற்கு மேற்கே பொன்னியம்மன் நகர் உள்ளது. இங்குள்ள 70 வீடுகளில் 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் அடுக்குமாடி கட்டிடம் கட்டுவதற்காக ஆழ்துளை ராட்சத எந்திரங்களை கொண்டு ஆழப்படுத்த இரும்பு கருவிகளை இடித்து அதன் துளையில் இருந்து மண் எடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அடுத்தடுத்து 5 இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெறுவதால் சத்தம் அதிகமாகவும், பூமியில் அதிர்வு ஏற்பட்டு அருகே உள்ள அனைத்து வீடுகளிலும் விரிசல் ஏற்பட்டும் விடுகிறது. இதனால் குடியிருப்புவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து மணலி புதுநகர் போலீசில் புகார் செய்தனர். ஆனால் தொடர்ந்து கட்டுமானப்பணி நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து பொன்னியம்மன் நகர் மக்கள் ஒன்றுகூடி குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி கட்டும் இடத்திற்கு சென்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்த மணலி புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தநிலையில் பாதிக்கப்பட்டவரின் ஒவ்வொரு வீட்டிற்கும் போலீசார் நேரில் சென்று விரிசல் ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர். பின்னர், அடுக்குமாடி கட்டிடம் கட்டுவதற்கு ஆழ்துளை கிணறு தோண்டும் எந்திரத்தை பயன்படுத்தக்கூடாது, மாற்று வழியில் பணியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளை போலீசார் கேட்டுக்கொண்டனர்.
பின்னர் ஆழ்துளை பள்ளம் தோண்டும் பணி நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதனையடுத்து குடிசை மாற்று வாரியம், அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணியை தொடங்க டெண்டர் விடப்பட்டு தனியார் கட்டுமான நிறுவனத்தினர் பணிகளை தொடங்கினர்.
குடிசை மாற்று வாரியம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் இடத்திற்கு மேற்கே பொன்னியம்மன் நகர் உள்ளது. இங்குள்ள 70 வீடுகளில் 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் அடுக்குமாடி கட்டிடம் கட்டுவதற்காக ஆழ்துளை ராட்சத எந்திரங்களை கொண்டு ஆழப்படுத்த இரும்பு கருவிகளை இடித்து அதன் துளையில் இருந்து மண் எடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அடுத்தடுத்து 5 இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெறுவதால் சத்தம் அதிகமாகவும், பூமியில் அதிர்வு ஏற்பட்டு அருகே உள்ள அனைத்து வீடுகளிலும் விரிசல் ஏற்பட்டும் விடுகிறது. இதனால் குடியிருப்புவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து மணலி புதுநகர் போலீசில் புகார் செய்தனர். ஆனால் தொடர்ந்து கட்டுமானப்பணி நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து பொன்னியம்மன் நகர் மக்கள் ஒன்றுகூடி குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி கட்டும் இடத்திற்கு சென்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்த மணலி புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தநிலையில் பாதிக்கப்பட்டவரின் ஒவ்வொரு வீட்டிற்கும் போலீசார் நேரில் சென்று விரிசல் ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர். பின்னர், அடுக்குமாடி கட்டிடம் கட்டுவதற்கு ஆழ்துளை கிணறு தோண்டும் எந்திரத்தை பயன்படுத்தக்கூடாது, மாற்று வழியில் பணியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளை போலீசார் கேட்டுக்கொண்டனர்.
பின்னர் ஆழ்துளை பள்ளம் தோண்டும் பணி நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story