ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் மாணவர்களுக்கான கலைப்போட்டிகள்


ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் மாணவர்களுக்கான கலைப்போட்டிகள்
x
தினத்தந்தி 13 March 2019 3:45 AM IST (Updated: 13 March 2019 1:35 AM IST)
t-max-icont-min-icon

ஜவஹர் சிறுவர் மன்றம் சார்பில் மாணவர்களுக்கான கலைப்போட்டிகள் தொடங்கப்படுகிறது.

பெரம்பலூர்,

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் மாவட்ட அள விலான கலைப்போட்டிகள் அரியலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வருகிற 16-ந் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது.

இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் பெரம்பலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வருகிற 17-ந் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் 5 வயது முதல் 16 வயது வரை உள்ள மாணவ- மாணவிகளுக்கு 3 பிரிவு களாக வாய்ப்பாட்டு (குரலிசை), நடனம், கிராமியநடனம், ஓவியம் ஆகிய கலைப்போட்டிகள் நடைபெறுகிறது. குரலிசை போட்டியில் கர் நாடக இசையில் தமிழ் பாடல் கள் மட்டுமே பாடவேண்டும். திரை இசை பாடல்களுக்கு அனுமதி இல்லை. கிராமிய நடனப்போட்டியில் தமிழக கலை, கலாசாரத்தை வெளிப்படுத்தும் கிராமியக்கலை நடனங்களை ஆடலாம். முழுஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருக்கவேண்டும். நடனத்திற்கான பாடலை குறுந்தகடு (சி.டியில்) கொண்டு வரவேண்டும்.

நடனப்போட்டியில் பரதநாட்டியம், குச்சுப்புடி, மோகினிஆட்டம் ஆகிய நடனங்களில் முழுஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் கலந்துகொள்ளலாம். இதில் மேற்கத்திய நடனம் மற்றும் குழு நடனம் ஆட அனுமதியில்லை. நடனத்திற்குரிய பாடல் குறுந்தகடை போட்டியாளர்கள் கொண்டுவர வேண்டும்.

ஓவியப்போட்டிக்கு 40 சென்டி மீட்டர் நீளமும், 30 சென்டி மீட்டர் அகலமும் உள்ள ஓவியத்தாள்கள் உள்பட தேவையான வரைபொருட்களை மாணவர்கள் தாங்களே கொண்டுவர வேண்டும். இப்போட்டியில் குழுவாக பங்கேற்கமுடியாது.

போட்டியில் பங்கேற்பவர் கள் தங்களது பிறப்பு சான் றிதழின் நகல் அல்லது பயிலும் பள்ளியில் இருந்து சான்றிதழை கொண்டுவந்து போட்டிநடைபெறும் தினத்தில் காலை 9.30 மணிக்கு முன்னதாக தங்களது பெயரை பதிவு செய்துகொள்ளலாம். இதில் மாவட்ட அளவில் முதல் பரிசு பெறுபவர்கள் மாநில அள விலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். 

Next Story