தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: கரூரில் அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் மூடப்பட்டது


தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: கரூரில் அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் மூடப்பட்டது
x
தினத்தந்தி 12 March 2019 10:45 PM GMT (Updated: 12 March 2019 8:42 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதன் காரணமாக கரூர் நகரில் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த கட்சி கொடிக்கம்பங்கள், விளம்பர பதாகைகள் ஆகியவை அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.

கரூர்,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதன் காரணமாக கரூர் நகரில் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த கட்சி கொடிக்கம்பங்கள், விளம்பர பதாகைகள் ஆகியவை அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. சுவர் விளம்பரங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன. மேலும் சாதி ரீதியாகவும், தலைவர்கள் பெயரை தவறாக பயன்படுத்தி தேர்தலில் வாக்காளர்களை அணுக கூடாது என்பதற்காக அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் துணியால் மூடப்பட்டு வருகிறது. அதன்படி கரூர் நகரில் மனோகரா கார்னர் ரவுண்டானாவில் உள்ள அண்ணா சிலை, அதன் அருகேயுள்ள காமராஜர் சிலை உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் சிலைகளை நேற்று நகராட்சி பணியாளர்கள் துணியால் மூடி மறைத்தனர்.

Next Story