எனது ராஜினாமா கடிதத்தை அங்கீகரிக்க வேண்டும் சட்டசபை சபாநாயகருக்கு உமேஷ்ஜாதவ் எம்.எல்.ஏ. கோரிக்கை
எனது ராஜினாமா கடிதத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று சட்டசபை சபாநாயகருக்கு உமேஷ்ஜாதவ் கோரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரு,
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உமேஷ்ஜாதவ் எம்.எல்.ஏ., மந்திரி பதவி கிடைக்காததால் கடும் அதிருப்தியில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் தனது பதவியை ராஜினாமா செய்து, சபாநாயகர் ரமேஷ் குமாரிடம் கடிதம் கொடுத்தார்.
அவரது ராஜினாமா கடிதம் இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை. இதற்கிடையே கடந்த 6-ந் தேதி கலபுரகியில் நடைபெற்ற பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி முன்னிலையில் உமேஷ்ஜாதவ் அக்கட்சியில் சேர்ந்தார்.
இந்த ராஜினாமா குறித்து 12-ந் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி உமேஷ்ஜாதவுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். அதன்படி அவர் நேற்று விதான சவுதாவுக்கு வந்தார். ஆனால் சபாநாயகர், நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், விசாரணை நடத்த இயலாது என்று கூறி அதை ஒத்திவைத்தார். அதன் பிறகு உமேஷ்ஜாதவ் நிருபர் களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கடந்த 4-ந் தேதி சபாநாயகரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தேன். ராஜினாமா குறித்து சில விளக்கம் தேவைப்படுவதாகவும், அதனால் 12-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்றும் சட்டசபை செயலாளர் உத்தரவிட்டார்.
அதனால் சபாநாயகர் முன் ஆஜராக நான் இன்று (நேற்று) நேரில் வந்தேன். ஆனால் சபாநாயகர் வெளியூரில் இருக்கிறார். அதனால் சட்டசபை செயலாளரிடம் எனது விளக்கம் அடங்கிய கடிதத்தை கொடுத்துள்ளேன்.
சபாநாயகர் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. எனது பெற்றோருக்கு இணையாக சபாநாயகரை மதிக்கிறேன். அவர் யாருடைய அழுத்தத்திற்கும் பணியாமல் எனது ராஜினாமாவை அங்கீகரிப்பார் என்று நம்புகிறேன்.
கலபுரகி தொகுதியில் மக்கள் என்னை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மே மாதம் 23-ந் தேதி மக்களின் ஆதரவு யாருக்கு என்பது தெரியவரும். இவ்வாறு உமேஷ்ஜாதவ் கூறினார்.

Related Tags :
Next Story