தி.மு.க. மாணவரணியினர் ஆர்ப்பாட்டம் பொள்ளாச்சியில் பாலியல் பலாத்காரம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்கக்கோரி நடந்தது
பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கக்கோரி தி.மு.க. மாணவரணி சார்பில் நாகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்,
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி உள்பட ஏராளமான பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கட்சியினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்ட தி.மு.க. மாணவரணி சார்பில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் உதயகுமார் தலைமை தாங்கினார். துணை அமைப்பாளர்கள் பாலா, டேனியல், சுந்தர், பாரி, செந்தாமரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சமூக வலைதளம் மூலம் வலைவிரித்து பல்வேறு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது அரசியல் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. மாணவரணியை சேர்ந்த வினோத், உமாபதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story