தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தும் தலைவர்களின் சிலைகளை மூடுவதில் தாமதம்


தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தும் தலைவர்களின் சிலைகளை மூடுவதில் தாமதம்
x
தினத்தந்தி 14 March 2019 4:00 AM IST (Updated: 14 March 2019 2:09 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை நகரில் உள்ள தலைவர்களின் சிலைகளை இன்னும் மூடி மறைக்காமல் உள்ளது.

புதுக்கோட்டை,

இந்தியா முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் அரசியல் கட்சி தலைவர்களின் உருவச்சிலைகள் சாக்குப்பையாலோ அல்லது பழைய துணியாலோ மூடி மறைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகளை, அந்தந்த மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலராக இருக்கும் மாவட்ட கலெக்டர் கள் உத்தரவின் பேரில் சிலைகளை மூடி மறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை நகரில் உள்ள தலைவர்களின் சிலைகளை இன்னும் மூடி மறைக்காமல் உள்ளது. இதில் புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை, பெரியார் சிலை மற்றும் தீரர் சத்தியமூர்த்தி சிலை, கீழ ராஜ வீதி தெற்கு 4-ம் வீதி சந்திப்பில் உள்ள அண்ணாசிலை ஆகியவை இதுவரை மறைக்கப் படாமல் உள்ளது. இதேபோல் ஆலங்குடி, கறம்பக்குடியில் உள்ள காமராஜர் சிலைகள் மூடப்படாமல் உள்ளது. 

Next Story