கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 14 March 2019 4:00 AM IST (Updated: 14 March 2019 2:16 AM IST)
t-max-icont-min-icon

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கரூர்,

கரூரில் பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்தாண்டும் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கல்யாண பசுபதீஸ்வரருக்கு பால், பழம், விபூதி உள்பட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து கோவிலில் உள்ள கொடி கம்பத்திற்கு பூஜை செய்யப்பட்டது.

பின்னர் கொடியேற்றப்பட்டு, தீபாராதனை நடந்தது. இதில் முன்னாள் அறங்காவலர் பாலாஜி பேப்ரிக்ஸ் சண்முகம், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராமசாமி, செங்குந்த முதலியார் சமுதாயத்தினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பங்குனி திருவிழாவின் 6-ம் நாள் நிகழ்ச்சியாக சுவாமிபல்லக்கில் எழுந்தருள செய்து அப்பிபாளையத்தில் இருந்து எடுத்தும் வரும் நிகழ்ச்சியும், 7-ம் நாள் திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது.

தொடர்ந்து பங்குனி திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை 7 மணிக்கும், மாலை 6.30 மணிக்கும் சுவாமி திருவீதி உலாவும் ஆன்மிக சொற்பொழிவும் நடக்கிறது. இதற் கான ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் (பொறுப்பு) வேல்முருகன் செய்து வருகிறார்.

Next Story