பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட உதவி தேர்தல் அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்


பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட உதவி தேர்தல் அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 14 March 2019 10:30 PM GMT (Updated: 14 March 2019 6:56 PM GMT)

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட உதவி தேர்தல் அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்தது.

பெரம்பலூர்,

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடத்தும் உதவி தேர்தல் அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சாந்தா தலைமை தாங்கினார். ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் சாந்தா பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட குளித்தலை, லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் (தனி) மற்றும் பெரம்பலூர் (தனி) ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் முன்னேற்பாடுகள், நகர்புறங்களிலும், கிராமபுறங்களிலும் பொது மற்றும் தனியார் சுவர்களில் வாக்காளர்களை கவரும் விதத்தில் தற்போது செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், கொடி கம்பங்கள் உள்ளிட்டவற்றை அகற்றுதல், தேர்தல் விதிமுறைகள் கண்காணித்திடும் பொருட்டும், தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளவும் அமைக்கப்பட்டுள்ள பறக்கும்படை குழு, நிலையான கண்காணிப்புக்குழு மற்றும் வீடியோ கண்காணிப்புக் குழுக்களின் செயல்பாடுகள் குறித்து அந்தந்த சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் கேட்டறிந்தார்.மேலும் கலெக்டர் சாந்தா பதற்றமான மற்றும் நெருக்கடியான வாக்குச்சாவடி மையங்களின் விபரம், அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் அமைக் கப் பட்ட உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச அடிப்படை வசதிகள், வாக்குச்சாவடி மையங்களில், மைய எண்ணை குறியிடுதல், அனைத்து சட்டமன்ற தொகுதிகளின் அச்சிடப்பட்ட வாக்காளர் பட்டியலை சமர்ப்பித்தல், தேர்தல் தொடர்பான மண்டல அளவிலான அலுவலர்களை நியமித்தல் மற்றும் தேர்தல் நாளில் வாக்குச்சாவடி மையத்தில் தேர்தல் பணிக்காக ஈடுபடுத்தப்படும் அலுவலர்களை நியமித்தல், அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தல் காப்பறையில் வைக்கப்பட்டுள்ள வாக்குபதிவு எந்திரங்களின் விபரம் குறித்தும் கேட்டறிந்தார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜராஜன், சட்டமன்ற தொகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story